உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள் அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 35 கோடி 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் சேவ் த சில்ரன் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள் பெரும்பாலும் போர் நடைபெறும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது