குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை பதவி நீக்கும் உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடையாது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிரதமரை ஜனாதிபதியினால் பதவி நீக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தரணிகளான லால் விஜேநாயக்க, கே.எஸ்.ரத்னவேலு, சுதத் நெத்சிங்க, பிரபோதா ரட்நாயக்க மற்றும் ஹரின் கோமஸ் ஆகியோர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்த முன்னதாக பிரதரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்பட்டது என தெரிவித்துள்ளனர். எனினும், 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் அந்த அதிகாரம் ரத்தாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் பிரதமரை பதவி நீக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.