128
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விளக்கம் அளிக்க உள்ளது. அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி இலங்கை தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
Spread the love