சென்னை மெரீனா கடற்பரப்பில் ரொக்கட் வடிவிலான மர்மப் பொருளால் ஒன்று ஒதுங்கியதனால் அது வெடிகுண்டாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. எனினும் வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட ஆயிவுகளில் அது கப்பல்களில் பயன்படும் போயோ எனும் மிதவை என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குறித்த பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பொருளின் எடை சுமார் 3.5 முதல் 4 தொன் எடை வரை இருக்கும் எனவும் இந்த பொருள் கப்பல்களில் பயன்படுத்தப்படும் போயோ எனும் மிதவை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் அதனை உறுதிப்படுத்திய நிபுணர்கள் அச்சப்படும் வகையில் இல்லை எனதட தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.