காவிரி நதிநீர் வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, வணிக நிறுவனங்கள், விடுதிகளுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கான நீர் பங்கீடு குறைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்னர். இதையடுத்து, பல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாயின.
மேலும் தமிழகத்தில் உள்ள கர்நாடக மாநிலத்தவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையினர் வழங்கிய தகவல்ககமைய இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தவர்களுக்கு சொந்தமான சுமார் 70 நிறுவனங்கள், பாடசாலைகள், விடுதிகள் , வங்கிகள், சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளதுடன் பலத்த காவல்துறையினர் வாகனங்களில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மத்திய அரசு அலுவலகங்களை யாராவது முற்றுகையிடக் கூடும் என்பதால் அங்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.