நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நேர்காணலும் குறித்த படத்தில் இடம்பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி 4 வயதில் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய ஆகியோருடன் இவர் நடித்துள்ளார்.
மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, நான் அடிமையில்லை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் . தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் இங்கிலிஸ் விங்கிலிஸ், மம்மி மற்றும் புலி ஆகிய படங்களில் முக்கிய வேடமேற்று நடத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது