குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் நெருங்கிய சகா ஒருவர் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரச்சாரக்குழுவின் தலைவராக செயற்பட்ட போல் மானாபோட் என்பவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி மோசடியொன்றில் ஈடுபட்டதாக போல் மானாபோட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிச் சலவையில் ஈடுபட்டதாக ஏற்கனவே மானாபோட் மீது கடந்த ஒக்ரோபர் மாதம் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் பிணை கோரி மனு தாக்கல் செய்த போது இவ்வாறு மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணை மனு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. பிணையாக காண்பிக்கும் வங்கியிலிருந்து உத்தரவாதமொன்றை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை மானாபோட் சமர்ப்பித்திருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தார் என மானாபோட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.