Home இந்தியாஇணைப்பு 3 – கம்யூனிஸ்டுகளின் கோட்டை திரிபுராவில் வாக்குப்பதிவு ஆரம்பம்…

இணைப்பு 3 – கம்யூனிஸ்டுகளின் கோட்டை திரிபுராவில் வாக்குப்பதிவு ஆரம்பம்…

by admin


60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சியில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக அக்கட்சி சார்பில் மாணிக் சர்கார் முதல்வராக இருந்து வருகின்றார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க இங்கு ஆட்சியைப் பிடித்துவிட தீவிர முயற்ச்சி மேற்கொண்டது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. சாரிலாம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து தங்களது கடமையை ஆற்ற வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வருகின்றனர். 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 25.7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 3214 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 47 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான வங்காளதேசத்துடனான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ம் திகதி எண்ணப்படுகின்றன.

இணைப்பு 2 – திரிபுராவில் பெப்ரவரி 18ம் மேகாலயா – நாகலாந்தில் பெப்ரவரி 27-ம் திகதியும் தேர்தல்

Jan 18, 2018 @ 07:09

திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18-ம் திகதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெப்ரவரி 27-ம் திகதியும், சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.  மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதால் இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டசபை தேர்தல் திகதி வெளியாகவுள்ளது..

Jan 18, 2018 @ 04:02

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திகதியை தேர்தல் ஆணையகம் இன்று அறிவிக்கவுள்ளது. மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக் காலம் மார்ச் 6, மார்ச் 13 மற்றும் மார்ச் 14-ந் திகதிகளில் முடிவடைகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் உள்ளது. பாஜகவும் இந்த அரசில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. திரிபுராவில் கால் நூற்றாண்டுகாலமாக தொடர்ந்து இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் இந்த 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் திகதியை இன்று தலைமை தேர்தல் ஆணையகம் அறிவிக்க உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More