குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ரணில் மற்றும் நிமால் ஆதரவுக் குழுக்கள் கையெழுத்துப் போட்டியில் இறங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரணிலுக்கு ஆதரவான தரப்பினரின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமும், கரு ஜெயசூரியவிடமும் கையளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கியதேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து காலையில் சிறிகொத்தாவில் கூடிய 45 வரையிலான ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர்கள் தமது கலந்துரையாடலின் பின் ரணில் ஆதரவு தரப்பினரிடம் கையொப்பம் பெறுவதென முடிவெடுத்தமைக்கு அமைவாக மாலையில் மிண்டும் ஒன்று கூடி கையொப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாலித றங்கேபண்டார இந்த ஆதரவு பட்டியலில் கையொப்பம் இடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கரு ஜெயசூரியவுடன் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ள ரணில் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மறு தரப்பினர் நிமால் சிரிபால டீ சில்வாவை பிரதமராக்கும் முயற்சியில் கையொப்பங்களை திரட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.