171
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற விhத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிலர் டிரக் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது டிரக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று தலைகீழாகக் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love