போகோ ஹராம் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 500 பேரை விடுதலை செய்துள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விசாரணை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கைஞ்சி நகரில் உள்ள ராணுவத் தடுப்பு முகாமில் இருந்தும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது . போகோ ஹராம் தொடர்பான வழக்கில் பலர்; இந்த வாரம் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.