Home இந்தியாராமேசுவரம் மீனவர்களுக்கு 4 நாள் கடலில் மீன் பிடிக்க தடை

ராமேசுவரம் மீனவர்களுக்கு 4 நாள் கடலில் மீன் பிடிக்க தடை

by admin

ராமேசுவரம் மீனவர்களுக்கு 4 நாள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24-ம் திகதிகளில் நடைபெறவுள்ளதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

மேலும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களுக்கும் மீன்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று மீன்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More