பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழகில் கைதான குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளியான இம்ரான் அலி என்பவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கசூர் மாவட்டத்தினைச் சேர்ந்த சைனாப் அன்சாரி என்ற சிறுமி கடந்த ஜனவரி 5-ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போனநிலையில் இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். சைனாப் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்தநிலையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க சுமார் 1,150 டிஎன் ஏ மாதிரிகள் திரட்டப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர் கொலைகாரன் என்று அறியப்படும் இம்ரான் அலி என்பவரைகைது செய்த பாகிஸ்தான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்
இந்த நிலையில் விசாரணையின் முடிவில், இம்ரான் அலி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இந்த கொலை மற்றும் பலாத்கார வழக்கில் 1 மாதத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது