குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் , கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது
குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்தர் வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தருடன் முகநூல் மூலம் நட்பாகி தனது உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுத்து தருமாறு கோரியுள்ளார். அதனை அடுத்து அமைச்சின் உத்தியோகத்தர். அவரது கோவைகளை தனக்கு யாழில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்புமாறும். அமைச்சின் கணக்குக்கு உரிய தொகையை வைப்பிலிடுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த சமூர்த்தி உத்தியோகஸ்தர் இவையனைத்தையும் உடனடியாக நிறைவேற்றினார்
சட்ட ரீதியாக அமைச்சின் அலுவலர் இவரது விடயத்தை கையாண்டு உரிய கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். எனினும் தூதுவராலயம் இவரது ஆவணங்கள் தவறானவை இவை போலியானவை என கூறி சமுர்த்தி உத்தியோகத்தரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தூதுவராலயம் அவரது வீட்டு விலாசத்துக்கு திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர் அவரை அச்சுறுத்தியதோடு தனது உறவினர் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் அந்த உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்
இது தொடர்பில் விசாரணை நடாத்த அமைச்சு அதிகாரிகள், குறித்த சமூர்த்தி உத்தியோகஸ்தரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் கொழும்பு செல்லாது தொடர்ச்சியாக அந்த உத்தியோகத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.