குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என சுதந்திரக் கட்சி தற்போது அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்தில் நீடிப்பதாகவும் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தம்மிடம் உள்ள போதிலும் அதனை இரண்டாவது சந்தர்ப்பமாகவே பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்கள் அனைவரும் தனித்து ஒரு குழுவாக செயற்படப்போவதாக எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது. எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்காமல் தாங்கள் தனித்து செயற்படப் போவதாகவும் இன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது