குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணி குழாமை விஸ்தரிக்க வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை அணி கலந்து கொண்ட முதல் போட்டித் தொடரில் அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து கள நிலைமைகளுக்கும் போட்டியிடக் கூடிய வகையிலான வீரர்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் ஒரு சில வீரர்கள் மட்டும் தொடர்ச்சியாக விளையாடுவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை அணியின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனவும் விஸ்தரிக்கப்பட்ட ஓர் குழாமை கொண்டிருந்தால் அதிலிருந்து பொருத்தமான வீரர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருக்காது எனவும் சந்திக்க ஹத்துருசிங்க
குறிப்பிட்டுள்ளார்.