குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தை விட்டு விலகினால் என்ன நேரும் என்பது குறித்து சட்ட விளக்கம் கோரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சட்ட விளக்கம் கோருவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு என்ன நேரும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்க முடியுமா என சட்ட மா அதிபரிடம் ஜனதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் பிரதமரை அவ்வாறு பதவி நீக்க முடியாது என சட்ட மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது