இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் மட்டுமின்றி, 100-க்கும் அதிகமான வட்டார மொழிகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் இந்த 100 மொழிகளில் 42 வட்டார மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசி வருகின்றனர். இந்த 42 மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 11 மொழிகளும் மணிப்பூர் பழங்குடிகளின் 7 மொழிகளும் இமாச்சலப்பிரதேசத்தில் 4 மொழிகளும் ஒடிசாவில் 3 மொழிகளும் கர்நாடகாவில் 2 மொழிகளும் தமிழகத்தில் 2 மொழிகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த வட்டார மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது