மொசாம்பிக்கில் பாரிய குப்பைமேடொன்று திடீரெனச் சரிந்ததில் 17 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொசாம்பிக்கில் சில பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள மபுடோ என்ற நகரின் புறநகர் பகுதிகளில் நகரம் முழுவதும் சேரும் குப்பைகள் ஒன்றாக கொட்டி குவிக்கப்படுகின்றன.
பல ஆண்டுகளாக அங்கு கொட்டப்படும் குப்பைகள் சுமார் மூன்று மாடி கட்டிடத்தின் உயரம் அளவுக்கு குவிந்துள்ள நிலையில் குறித்த குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் சிக்கிக்கொண்டுள்ளநிலையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.