Home இலங்கைஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவோம் – மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவோம் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் இன்னும் இரண்டு வெசாக் பௌர்ணமி தினங்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும், பிரதமர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை நியமித்தால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படாது எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More