சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரச ஆதரவு படையினர் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதுடன் 300 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் கிழக்குப் பகுதியில் உள்ள கவுடா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் 20 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான தாக்குதல், ரொக்கெட் குண்டு தாக்குதல், பீரங்கி தாக்குதல் போன்ற தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு ஆரம்பமான உள்நாட்டுப் போரில் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஸ்யாவும் செயற்பட்டு வருகின்றனர். அங்கு இடம்பெறும் இந்த தாக்குதல்களில் இதுவரை 400,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.