இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் விசவாயுக் கசிவு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அமோனியா வாயு சிலிண்டர்களில் ஒன்று வெடித்ததால் இந்த விசவாயு கசிந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சத்தம் கேட்டு தொழிற்சாலைக்கு சென்ற கிராம மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து; சம்பவ இடத்துக்கு சென்ற உயரதிகாரிகள தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது