ஜார்க்கண்ட் மாநிலத்தில் 600 கோடி ரூபா செலவில் உலகின் மிக உயரமான புத்த ஸ்தூபி அமைக்கப்படும் என மாநில முதலமைச்சர் ரகுவர் தாஸ் தெரிவித்தார். நேற்று முன்தினம் இத்கோரி மகோத்சவ விழாவை ஆரம்பித்து வைத்தபின் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரன் பகுதியிலுள்ள கேசரியா பகுதியில் உள்ள 104 அடி உயர புத்த ஸ்தூபிதான் புத்த ஸ்தூபிகளிலேயே மிகவும் உயரமானது எனவும் அதனைவிட உயரமான புத்த ஸ்தூபியை இத்கோரி பகுதியில் தாங்கள் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாரகி ஜூலை மாதத்தில் புத்த ஸ்தூபி திட்டம் உருவாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள்இ புத்த மதத்தவர்இ ஜெயின் மதத்தவர் இணையும் சங்கமாக சத்ரா மாவட்டம் அமையும். இந்த புத்த ஸ்தூபி அமைக்கும் திட்டம் அடுத்த மகோத்சவ விழாவுக்குள் நிறைவேறும் எனவும் இதற்காக 600 கோடி ரூபா செலவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்பு தீவிரவாதிகள் புகலிடமாக இருந்த சத்ரா பகுதி தற்போது தீவிரவாதிகளே இல்லாத நிலையக்கு கொண்டுவரப்பட்டள்ளதாகவும் இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வேண்டியதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.