தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த கூற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் தொடர்ச்சி குறித்த ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (21.02.18) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான இரண்டு வருட கால ஒப்பந்தம், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.