நாள்தோறும் 24 கிமீ தூரம் நடந்து பாடசாலைக்கு சென்று வரும் முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டு அம்மாணவர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடந்தவாரம் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பேரில் இன்றுமுதல் (பெப் 21) அம்பாள்புரம் ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேருந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இப்பேரூந்து சேவையை நடத்தும் முல்லைத்தீவு இலங்கைப் போக்குவரத்து டிப்போவின் பொறுப்பதிகாரி திரு குணசீலன் தெரிவித்துள்ளார்.