இன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா மேற்படி சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் அறியப்பட வேண்டும்.
அதேநேரம், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள், பொறுப்புமிக்க அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, செய்திகளை வெளியிடுகின்றபோது , தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், அப்பாவித் தமிழ் மக்கள்மீது பலியினைப் போடாத வகையிலும்; நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்