மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம்; என்று அறிவித்துள்ளார்.இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய கமல் தான் சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு எனவும் அதை பாதுகாப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து மதுரை வந்த கமல், அங்கு ஏற்கனவே வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றதுடன் அவருடன் ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்து கட்சிக் கொடியேற்றிய பின்னர் மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.