181
தியதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து வெடிப்புச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல என இராணுவம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.45 மணிக்கு தியதலாவ கஹாகொல்ல பிரதேசத்தில் பயணித்த பேருந்து ஒன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்று, பேருந்து தீப்பற்றிக்கொண்டது.
இந்த விபத்தில் படைவீரர்கள் உள்ளிட்ட 19 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல என இராணுவம் குறிப்பிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love