குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமாரி விஜேவர்தன பதவிக்காலம் நிறைவடைந்தே செல்கின்றார்
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன அவரது பதவிக்காலம் நிறைவடைந்தே செல்கின்றார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமாரி விஜேவர்தன பதவி விலகத் தீர்மானித்துள்தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த செய்து தவறானது என்று வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய உள்ளமையால் அவரது விருப்பின் பேரில் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் ஒப்பந்த காலத்தை முடிவுறுத்த உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியாவற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதியுடன் பதவிவிலக உள்ளதாகவும் பதவிவிலகல் கடிதத்தை அமாரி விஜேவர்தன ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகுகின்றாரா?
Feb 22, 2018 @ 02:54
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதியுடன் பதவிவிலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிவிலகல் கடிதத்தை அமாரி விஜேவர்தன ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக அவர் பதவி விலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமாரி விஜேவர்தன லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.