வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டுமற்றும் இளைஞர் விவகாரஅமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வடமராட்சி கிழக்கில் ஆறு பாடசாலைகளுக்கு நேற்று (21.02.2018)விஜயம் செய்திருந்தார். சுனாமி, யுத்தம், இரானுவ ஆக்கிரமிப்பு மற்றும் இடப் பெயர்வுகள் காரணமாக அழிவுற்று மீள்குடியேற்றம் மற்றும் மீள் கட்டுமானம் அவசியமாகவுள்ள பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் என்ற வகையிலும் தற்காலிக கொட்டகைகளில் பலவருடங்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகள் என்ற வகையிலும் பாடசாலைகளுக்கு தேவைப்படுகின்ற பௌதீக மற்றும் ஆசிரிய வளங்கள் தொடர்பில் நேரடி ஆய்வினை மேற் கொள்ளும் பொருட்டு இவ் விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இவ் வகையில்
01.யாழ்/kணற்காடுறோ.க.த.க.பாடசாலை,
02.யாழ்/நாகர் கோவில் மகாவித்தியாலயம்,
03.;யாழ்/கட்டைக்காடுறோமன் கத்தோலிக்க த.க. பாடசாலை,
04. யாழ்/வெற்றிலைக்கேணிபரமேஸ்வரா ம.வி ,
05. யாழ்/உடுத்துறை ம.வி
06.யாழ்/உடுத்துறைறோ.த.க.பாடசாலைகளுக்கு
விஜயம் செய்திருந்தார். இவற்றில் மணற்காடு றோ.க.த.கபாடசாலைக்கு 2016ம் ஆண்டு ஒதுக்கீடுகளில் ரூபா 725000 செலவில் விளையாட்டு முற்றமும்,ரூபா 5000000 செலவில் வகுப்பறைகட்டிடங்களும் ரூபா 625000 செலவில் சுகாதாரவசதிகளும் ரூபா1330000செலவில் குடிநீர் சுகாதார வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன எனினும் மேலும் வகுப்பறைத்தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டியுள்ளன இது போன்றே நாகர் கோவில் மகாவித்தியாலத்துக்குரூபா 7500000 செலவில் வகுப்பறைக் கட்டிடங்களும் ரூபா 695000 செலவில் குடிநீர் சுகாதாரவசதிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பௌதீகவளத்தேவைகள் மேலும் பூர்த்திசெய்யப்படவேண்டியுள்ளது. கட்டைக்காடு றோ.க.த.கபாடசாலையைப் பொறுத்தவரையில் பௌதீகவளத்தேவைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன. இது போன்றே வெற்றிலைக்கேணி பரமேஸ்வராவித்தியாலயம், உடுத்தறைமகாவித்தியாலயம் ஆகியவற்றிக்குபௌதீகவளங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளன. மேலும் ஒரு சிலபாடசாலைகளில் பெறுமதிமிக்க பௌதீக வளங்கள் பயன்படுத்தப்படாமலும்,பராமரிக்கப்படாமலும் இருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
இவை தொடர்பில் உரியநடவடிக்கை மேற்கொள்ள வலயக்கல்விப் பணிப்பாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது. இவ் விஜயத்தின் போது அமைச்சருடன் பிரத்தியேக செயலாளர் அனந்தராஜ், வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் நந்தகுமார் மற்றும் மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் பிறேமகாந்தன் ஆகியோரும் சென்றிருந்தனர்.