குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பஹ்ரெய்னில் டுவிட்டர் பதிவொன்றை இட்டமைக்காக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாபீல் ராஜாப் (Nabeel Rajab ) என்ற மனித உரிமை செயற்பாட்டாளருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது ராஜாப் முக்கிய பங்கினை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறைத்தண்டனையானது நீதியின் கன்னத்தில் அறைந்தது போன்றது என குற்றம் சுமத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை உடனடியாக ரஜாப்பை விடுதலை செய்ய வேண்டுமென ; கோரியுள்ளது.
போலியான செய்தியை வெளியிட்டதாகத் தெரிவித்து ஏற்கனவே ராஜாப்பிற்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை இழிவுபடுத்தியதாகவும், யுத்தம் பற்றி பொய்யான தகவல்களை வெளியிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.