சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுளள் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகர் ஹேமந்த அதிகாரி கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில், இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்றையதினம் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த வாக்குமுலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதவான் முன்னிலையில் சுயாதீனமாக இரகசிய வாக்குமூலத்தை வழங்கத் தயார் என ஹேமந்த அதிகாரி கூறியதற்கு அமைவாக இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 3 மணிநேரம் அவர் இந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லசந்த படுகொலை சம்பந்தமான சில ஆவணங்கள ஹேமந்த அதிகாரியின் ஆணையின் படி நீக்கப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் ; நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது