Home இந்தியா பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கருவறையில் தீ

பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கருவறையில் தீ

by admin

கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கருப்பூர் என்ற கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கருவறையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த பூஜைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயிலுக்குள் இருந்த பக்தர்களும், நிர்வாகிகளும் தீயை அணைத்துள்ளனர். சமீப காலமாக அடுத்தடுத்து ஆலயங்களில் ஏற்படும் தீ விபத்துகள் மக்களை அச்சத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 2ம் திகதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அதனை அடுத்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்சஷமும் தீப்பிடித்து எரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More