குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சர்வதேச காவல்துறையினரான இன்டபோல் ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளினால் தேடப்பட்டு வரும் ஒர் நபராக உதயங்கவை அடையாளப்படுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மிக்-27 ரக விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உதயங்க மீது முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ளும் நோக்கில் உதயங்கவிற்கு கொழும்பு கோட்டே நீதிமன்றம் பிறப்பித்திருந்த அழைப்பாணைகளை, உதயங்க நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.