குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சவூதி அரேபியா பொழுது போக்குத் துறைக்காக 64 பில்லியன் டொலர்ளை முதலீடு செய்ய உள்ளது. எதிர்வரும் ஒரு தசாப்த காலத்தில் நாட்டில் பொழுதுபோக்குத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டில் மட்டும் 5000 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ரியாத்தில் ஒபேரா ஹவுஸ் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.
32 வயதான சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் திட்டத்திற்கு அமைய இந்த பொழுது போக்கு துறைசார் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் நம்பியிருக்காது வேறும் துறைகளில் முதலீடு செய்வதற்கு சவூதியின் முடிக்குரிய இளவரசர் திட்டமிட்டுள்ளார். 2030ம் ஆண்டை இலக்கு வைத்து சவூதி அரேபியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது