பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரழந்துள்ளார் எனவும் இன்று பகல் 01.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய வாகனம்; ஒன்றை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது வாகனத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் போதைப் பொருள் வர்த்தகரான தடல்லகே மஞ்சு என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த வானில் இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் வத்தளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்