Home இலங்கைஅவன் கார்ட் சம்பவத்தில் இருந்து எம்மை விடுவியுங்கள்…..

அவன் கார்ட் சம்பவத்தில் இருந்து எம்மை விடுவியுங்கள்…..

by admin


சர்ச்சைக்குறிய அவன் கார்ட் சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள்பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

அவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More