குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கான முன்னாயத்த கூட்டம் இன்று (23.02.2017 ) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆலய முன்றலில் நடை பெற்றது.
புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 30.3.2018 அன்று இடம்பெறவுள்ளது
இப் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெறுவதற்கு ஏற்ற வகையில் ஆலய சுற்று சூழலை சிரமதானம் செய்தல்ஆலய வீதி திருத்தங்கள் போக்குவரத்து வசதிகள் இகுடிநீர் வசதிகள்இசுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் இக் கூட்டத்தில் ஆராயப்படடன.
இக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மாகாண சபை உறுப்பினர்கள் த.குருகுலராஜா சு.பசுபதிபிள்ளை மற்றும் ப.அரியரட்ணம் ஆகியோரும் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன. உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்அரச மற்றும் தனியார் போக்குவரத்து சபை உத்தியாகத்தர்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும்அடியார்கள் என பலர் கலந்து கொண்டனர்