சினிமா, அரசியலில் இருந்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும் என்பதெல்லாம் மலையேறிப்போயிற்று. சமுக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் இந்தக்கால நடைமுறை வாழ்க்கையில், தென் மூலம் கோடிக்கணக்கானோர் பிரபலமாகவும், பல கோடிப் பேர் பின்தொடரவும் செய்யும் அளவிற்கும் ஒரு சக்திவாய்ந்த நபராகவும் விளங்குகிறார்கள். அவ்வாறான ஒருவரே கெய்லி ஜென்னர். இவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர், மொடல், சமுக வலைத்தளத்தில் பிரபலம் எனப் பல வெற்றி முகத்தைக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் டொனால்ட் டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் இவர் கிம் கர்தாஷியனின் சகோதரி.
ஸ்னப்சற் (Snapchat) சமுக வலைத்தள உலகில் முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), ருவிட்டர் (Twitter) போன்று புகழ்பெற்று விளங்கும் ஸ்னப்சற் (Snapchat), தனது செயலியில் சில மாற்றங்களைச் சில நாட்களுக்கு முன்பும் வெளியிட்டது. பல கோடிப்பேர் பயன்படுத்தும் இந்த ஸ்னப்சற் (Snapchat) செயலியின் புதிய மாற்றங்கள் பல வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கருத்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸ்னப்சற் (Snapchat) நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஸ்னப்சற் (Snapchat) தளத்தில் புகழ்பெற்று விளங்கும் கெய்லி ஜென்னர் தனது ஸ்னப்சற் (Snapchat) கணக்கில், தான் இனி ஸ்னப்சற் (Snapchat) செயலியை பயன்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
கெய்லி ஜென்னரின் ருவிட்டுக்கு என்ன இரு விடயங்கள் காரணமாக இருக்கலாம் என கண்டுப்பிடிக்கப்பட்டுது. ஒன்று சமீபத்தில் அவர் பெண் குழந்தை பெற்றுள்ளார். குழந்தையைக் கவனிக்க வேண்டியதால் ஸ்னப்சற்றுக்கு (Snapchat) அவர் வரப்போவதில்லை எனக் கருதப்படுகிறது. மற்றொன்று இந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மாற்றங்கள் பிடிக்காத காரணத்தால் இதனைப் பதிவு செய்துள்ளார். ஆனால் 2வது காரணமே அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியது மட்டும் அல்லாமல் ஸ்னப்சற் (Snapchat) நிறுவனத்தை நேரடியாகப் பாதித்தது. குறிப்பாக வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ஸ்னப்சற் (Snapchat) நிறுவனத்தின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 1.3 பில்லியன் டொலர் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8,436 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2.45 கோடி பேர் கெய்லி ஜென்னரை ஸ்னப்சறில் (Snapchat) பின் தொடர்கின்றனர்.
இதேவேளை டிவிட்டரில், “நான் மட்டும் தான் ஸ்னப்சறை (Snapchat) திறக்கவில்லையா? இல்லை என்னைப்போல் வேற யாரேனும் இருக்கிறீர்களா.. ரொம்ப வருத்தம்.. என ருவிட் செய்துள்ளார். இதன் மூலம் 2வது கணிப்பே உண்மையான காரணம் எனத் தற்போது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் கெய்லி ஜென்னர் செய்த ஒரு ருவீற்றால் ஸ்னப்சற் (Snapchat) இழந்த 8,500 கோடி ரூபாயை எப்படி ஈடு செய்யப்போகிறது என்பது இன்னும் ஸ்னப்சற் (Snapchat) முடிவு செய்யவில்லை. மேலும் டிசைன்களை மீண்டும் பழைய வடிவத்திற்கே மாற்றப்போகிறதா இல்லை தொடர்ந்து இதே வடிவத்தில் இயங்க உள்ளதா என்பது குறித்து ஸ்னப்சற் (Snapchat) கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.