192
மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. சதி பாசல மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாடு இன்று முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
சிறந்த முறையில் உளத் தெளிநிலையை பேணுவது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளும் வகையில் சமய, இன மற்றும் கலாசார பேதங்களின்றி உலகெங்கிலுமுள்ள நிபுணர்களுக்கான தளத்தை வழங்கி இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love