குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் சிரேஸ்ட ஆலோசகர்கள் இருவர் பதவி விலகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதம அதிகாரி ஆகியோரே இவ்வாறு பதவி விலகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இருவரில் ஒருவரே அல்லது இருவருமேயோ விரைவில் பதவி விலகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ட்ராம்பிற்கும், இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் இடையில் சில காலமாகவே கருத்து முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர் மற்றும் பிரதம அதிகாரி ஜோன் கெலி ஆகியோர் இருவரும் பதவி விலகுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதேவேளை, வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ராஜ் ஷா தெரிவித்துள்ளார்.