அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று அவரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
அந்த சிலை முழு உருவ வெண்கல சிலை ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று 7 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த சிலை சென்னை கொண்டு வரப்பட்டிருந்தது.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 அடி நீளத்தில் கேக் தயாரிக்கப்பட்டு வெட்டப்பட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டுள்ளது
அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.