Home இலங்கைமுனைக்காடு மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன….

முனைக்காடு மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன….

by admin

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இராமக்குட்டி சிவஞானம், சீனிதம்பி சிவகுமார், சிவலிங்கம் சீனிதம்பி ஆகியோரின் மீன்பிடி படகுகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளன.

படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் தோணி உரிமையாளர்களினால் கொக்கட்டிச் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More