குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தென்கொரியாவில் நடைபெற்று வருகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் நிறைவடையவுள்ளன.
இந்த நிலையில், ஆரம்ப நிகழ்வுகளின் போது ரஸ்ய தேசிய கொடியை அணி வகுப்பில் பயன்படுத்தவோ அல்லது மைதானங்களில் ஏற்றுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. போட்டித் தொடரின் நிறைவு நிகழ்வின் போதேனும் தேசிய கொடியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு ரஸ்யா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரியுள்ளது.
ஊக்க மருந்து பயன்பாடு சர்ச்சை காரணமாக ரஸ்யா குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை விதித்ததுடன், வீர வுPராங்கனைகள் சுயாதீனமாக பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஸ்யாவின் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.