226
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் பொதுச் சுகாதார சேவை குறித்து உலக வங்கி பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது. குறைந்த மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளில் இலங்கையின் பொதுச் சுகாதார சேவைகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்சேய் நலன், நோய்த்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் தரம் மிகுந்த சிறந்த முறையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love