இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையின் பணக்கார அரசியல்வாதி பட்டியலில் கருணா ஐந்தாம் இடம்! முதலிடத்தில் மகிந்த…

இலங்கையின் பணக்கார அரசியல்வாதி பட்டியலில் கருணா ஐந்தாம் இடம்! Forbes இதழ் தெரிவிப்பு- மகிந்தவே முதல் பணக்காரர்..

இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், ஐந்தாம் இடத்தை பிடித்திருப்பதாக Forbes இதழ் தெரிவித்துள்ளது.

1.7 மில்லியன்  அமெரிக்க டெலாலர் தனது சொத்தாக கருணாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 18 பில்லியன் டொலரை கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இலங்கையின் முதலாவது பணக்கார அரசியல்வாதியாக இடம் பிடித்திருப்பதாகவும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தை 6 கோடி 80 லட்சம் டொலரை கொண்டுள்ள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை யே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருப்பதாகவும் இவரிடம் ஒரு கோடி, 40 லட்சம் டொலர் சொத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் இடம் – எச்.எம். பௌசி 14 இலட்சம் டொலர், ஏழாம் இடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க – 14 இலட்சம் டொலர், எட்டாம் இடம் – ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, 13 இலட்சம் டொலர், ஒன்பதாம் இடம் – அத்தாவுல்ல, ஒன்பது இலட்சம் டொலர், பத்தாம் இடம் – இலட்சம் டொலர், பத்தாம் இடத்தில் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – 8 இலட்சம் 60 ஆயிரம் டொலர் சொத்தை கொண்டுள்ளனர்.

எனினும் பல கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ள வடக்கு முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரது சொத்து மதிப்பு விபரம் என்ன என்பதை குறித்து Forbes இதழ் குறிப்பிடத் தவறியுள்ளது என்றும் அவரும் முதல் பத்து இடங்களில் முன்னணியில் வரக்கூடியவர் என்றும் கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.