குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மீளவும் இலங்கைக்கு இந்த வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.
எனினும், வரிச் சலுகைத் திட்டத்தை அனுபவிப்பதற்கான சில அடிப்படைத் தகுதிகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சில விடயங்களை உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வுரிச் சலுகை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக என்பதனை கண்டறியும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய மீளாய்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் மந்த கதி நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளது.