172
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப், பாரவூர்தி ஒன்றுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். சுமார் 31 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஜீப் ஒன்றே இன்றையதினம் இவ்வாறு மோதி விபத்துள்ளாகியுள்ளது.
ஜீப்பில் இருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ; விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love