Home இலங்கைமஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட முடியாது :

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட முடியாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள நிலையில், மஹிந்தவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும், பின்னர் சிலர் எதிர்க்கட்சியில் சென்று அமர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More