190
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர்; தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிவடையும் வரை இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Spread the love